லிபியாவுக்கு இலங்கையரை அனுப்புவதற்கு தற்காலிகத் தடை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவிப்பு
லிபியாவுக்கு இலங் கைப் பணியாளர்களை அனுப்பும் நடைமுறை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சு லிபியாவின் தற்போதைய நிலைமையை கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளமையையடுத்து வெளிநாட்டு சேவைகள் மற்றும் நலன்புரியமைச்சர் டிலான் பெரேராவின் பணிப்புரைக்கமைய இந்நடைமுறை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதற்கிணங்க மறு அறிவித்தல் வரை தனிப்பட்ட ரீதியிலோ அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்திற்கூடாகவோ லிபியாவுக்கு இலங்கையிலிருந்து வேலை வாயப்புப் பெற்றுச் செல்லும் நடவடிக்கைகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டிருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பேச்சாளர் மங்கல ரந்தெனிய கூறினார்.
லிபியாவின் நிலைமை வழமைக்கு திரும்பியதும் இலங்கைப் பணியாளர்கள் மீண்டும் அந்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவரெனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை லிபியாவில் தற்போது தொழில் புரிந்துவரும் சுமார் 20 இலங்கையர்களை மீண்டும் பாதுகாப்பாக இலங்கை அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளையும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply