ராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலை ஆவார்களா?: இன்று தீர்ப்பு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாக கடந்த பிப்ரவரி 18-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. 
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத்தீர்ப்பை வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு இந்த மூன்று பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவு எடுக்கலாம் என்றும் குறிப்பிட்டது. இதன் அடிப்படையில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஜெயில் தண்டனை அனுபவித்து வரும் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட்பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்யும் வகையில் ஒரு அறிவிப்பை தமிழ்நாடு சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டார்.
தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, கடந்த பிப்ரவரி 20-ந்தேதியன்று முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட்பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரின் விடுதலைக்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.
இந்த மனுமீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் முன்பு நடைபெற்றது. அனைத்துத்தரப்பு வாதங்களும் கடந்த மார்ச் 27-ந்தேதியன்று முடிவடைந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் இன்று இந்த வழக்கின் மீதான இறுதித்தீர்ப்பு வழங்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply