மத்திய ஆப்பிரிக்காவில் வகுப்புவாத மோதல்: 1300 முஸ்லிம்கள் வெளியேறினர்
மத்திய ஆப்பிரிக்க தலைநகர் பன்குயி நகரை விட்டு உயிர் பயத்தில் 1300 முஸ்லிம்கள் வெளியேறினர். பன்குயி நகரில் இருந்து சுமார் 450 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நங்கா புகொய்லா என்ற ஊருக்குள் புகுந்த சிலர் 4 பேரை சுட்டுக் கொன்றனர். இதனையடுத்து, கிருஸ்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் அந்த பகுதியில் இருந்து முஸ்லிம்கள் குடும்பத்தாருடன் வெளியேறத் தொடங்கியுள்ளனர். உயிர் பிழைத்தால் போதும் என்ற பீதியில் மத்திய ஆப்பிரிக்காவின் வடக்கு பகுதியில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் தஞ்சம் அடையும் நோக்கத்தில் பலர் வாகனங்களில் மூட்டை முடிச்சுகளை ஏற்றிக் கொண்டு வெளியேறிய வண்ணம் உள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து இதுவரை கிருஸ்துவர்களின் திடீர் தாக்குதல்களுக்கு 22 பேர் பலியாகியுள்ளதாக அவர்களில் ஒருவர் தெரிவித்தார். இதே போல் மத்திய ஆப்பிரிக்கவின் தெற்கு பகுதியில் உள்ள போடாவில் வாழும் சுமார் 10 ஆயிரம் முஸ்லிம்களும் பாதுகாப்பான இடங்களை தேடிச்செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply