மும்பை அருகே பணம் கேட்டு கடத்தப்பட்ட சிறுவன் துண்டுத் துண்டாக வெட்டிக் கொலை

மகாராஷ்ட்டிரம் மாநிலம் பிவாண்டி பகுதியில் நகைக்கடை வைத்திருப்பவர் உத்தம். இவரது மகன் ரோகன்(12) அங்குள்ள ஒரு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 17-ம் தேதி காலை அவனை கடத்திச் சென்ற சிலர், ‘உன் மகனை விடுவிக்க வேண்டும் என்றால் ஐம்பது லட்சம் ரூபாயை ஏற்பாடு செய்து வைத்துக் கொள்’ என்று உத்தமை தொலைபேசியில் மிரட்டியுள்ளனர். இது தொடர்பாக அவர் போலீசில் புகார் அளித்ததை தெரிந்து கொண்ட அவர்கள் ரோகனைக் கொன்று அவனது உடலை மின்சார ரம்பத்தால் துண்டுத் துண்டாக வெட்டி தலை ஒரு பக்கம், கால் ஒரு பக்கம் என்று பல பகுதிகளில் வீசியுள்ளனர்.

தன்னிடம் எலக்ட்ரீஷியனாக் வேலை செய்துவந்த இஷ்தியாக் சையத் ஷேக் என்பவன் சில நாட்களாக வேலைக்கு வராததைக் கண்டு சந்தேகப்பட்ட உத்தம், போலீசுக்கு தகவலளித்ததை தொடர்ந்து அவனை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அவனிடம் நடத்திய விசாரணையிலும், உத்தம் வீட்டின் அருகில் இருந்த சி.சி.டி.வி.யில் பதிவாகியிருந்த காட்சிகளிலும் சிறுவன் ரோகனை இஷ்தியாக் சையத் ஷேக் கடத்திச் சென்றது உறுதியானது. அவனிடம் தீவிரமாக விசாரித்த போது உத்தம் போலீசில் புகார் அளித்து விட்டாரே என்ற கோபத்தில் ரோகனை கொன்று விட்டதாக வாக்குமூலம் அளித்தான்.

இதனையடுத்து, அவனுக்கு உடந்தையாக இருந்த 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்கள் அடையாளம் காட்டிய கால்வாயில் இருந்து நேற்று ரோகனின் தலையை மிட்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply