சூழ்ச்சிகளை ஒற்றுமையாக முறியடித்து தொழிலாளர் உரிமைகளை பாதுகாப்போம்
“நாட்டின் உழைக்கும் சக்திகளைக் குழப்பும் வகையிலான சூழ்ச்சிகள் குறித்து நாம் தொடர்ந்தும் விழிப்பாக இருக்க வேண்டும். எவ்வாறானபோதும், நமது உழைக்கும் மக்கள் மறைமுக நோக்கங்களோடு கொண்டுவரப்படும் அத்தகைய சூழ்ச்சிகளை ஒற்றுமையாக முறியடித்து தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பார்களென நான் முழுமையாக நம்புகிறேன். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விடுத்துள்ள மேதினச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, உலகெங்கிலும் உழைக்கும் மக்களின் மிக முக்கியமானதொரு கொண்டாட்டமான மே தினத்தை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். இந்த நிகழ்வு இலங்கை உழைக்கும் மக்களினால் மிகுந்த உற்சாகத்துடனும் பெருமையுடனும் கொண்டாடப்படுகின்றது.
நாட்டில் எமது உழைக்கும் மக்களுக்கு தேவையான ஒரு சாதகமான ஜனநாயக சூழல், தொழில் செய்யும் இடத்தில் ஒரு அமைதியான சூழ்நிலை, நிறுவனமயப்படவும் ஒன்றுகூடவுமான சட்ட உரிமைகள் என்பவற்றை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதில் உண்மையிலேயே நாம் அதிர்ஷ்டசாலிகள், தொழிலாளர் நட்புடைய ஒரு அரசாங்கம் என்றவகையில் உழைக்கும் மக்களுக்கு ஒரு சுதந்திரமானதும் ஜனநாயகபூர்வமானதுமான மே தினத்தை வழங்குவதில் நாம் வெற்றியடைந்திருப்பது எமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.
இன்று நாடு நிலையான அபிவிருத்தியை நோக்கி சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. எமது மஹிந்த சிந்தனை கொள்கை சட்டகத்தில் விபரிக்கப்பட்ட திவிநெகும மற்றும் கமநெகும அபிவிருத்திக் கருத்திட்டங்களின் கீழ் கிராமமும் நகரமும் துரிதமாக முன்னேற்றமடைந்து வருகின்றது. வேலையில்லாப் பிரச்சினையை நான்கு வீதத்திற்குக் குறைத்து ஐந்து வருடங்களாக பணவீக்கத்தை ஒற்றை இலக்கத்தில் பேணி வருவதில் எமது அரசாங்கம் அடைந்திருக்கும் வெற்றி குறித்து எமது உழைக்கும் மக்கள் மகிழ்ச்சியடைய முடியும்.
நாட்டின் உழைக்கும் சக்திகளைக் குழப்பும் வகையிலான சூழ்ச்சிகள் குறித்து நாம் தொடர்ந்தும் விழிப்பாக இருக்க வேண்டும். எவ்வாறனபோதும் எமது உழைக்கும் மக்கள் மறைமுக நோக்கங்களோடு கொண்டுவரப்படும் அத்தகைய சூழ்ச்சிகளை ஒற்றுமையாக முறியடித்து, தொழிலார்களின் உரிமைகளைப் பாதுகாப்பார்கள் என நான் முழுமையாக நம்புகிறேன். உள்நாட்டு, வெளிநாட்டு சவால்களை வெற்றி கொள்வதற்கு நாட்டின் உழைக்கும் மக்கள் அரசாங்கத்துடன் முழுமையாக ஒத்துழைப்பார்கள் என்று நான் நம்புகின்றேன்.
இந்த மே தினத்தில் இலங்கையின் உழைக்கும் மக்களினதும் அவர்களது தொழிற்சங்கங்களினதும் வெற்றிக்காக நான் எனது நல்லாசிகளைத் தெரிவிக்கின்றேன். இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தனது மேதினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply