சென்னை ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு : ஒருவர் பலி
சென்னையில் உள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இத்தாக்குதலில் பலர் படுகாயமடைந்துள்ளனர். உயிரிழந்த பெண்ணின் பெயர் ஸ்வாதி என்று அறியப்பட்டுள்ளது. இவர் ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர். கௌஹாத்தி – பெங்களூர் எக்ஸ்பிரஸ் ஒன்பதாவது நடைமேடைக்குள் நுழைந்தபோது அந்த ரயிலின் எஸ் – 4, எஸ் 5 பெட்டிகளில் இரண்டு குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. காயமடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இதையடுத்து சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் அனைத்து ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. ரயில் நிலையத்திலிருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டுவருகின்றனர்.
இந்த குண்டுவெடிப்பை அடுத்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அனைத்து பயணிகளும் பலத்த பாதுகாப்பிற்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டுவருகின்றனர்.
இதையடுத்து சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் அனைத்து ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. ரயில் நிலையத்திலிருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டுவருகின்றனர். சென்ட்ரல் ரயில் நிலையத்தின் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
தகவல்களைப் பெறுவதற்காக பெங்களூருக்கு 080 22876288 என்ற எண்ணும் சென்னைக்கு 044 25357398 என்ற தொலைபேசி எண்ணும் ஹெல்ப் லைன் எண்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply