சென்னை செண்ட்ரல் குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் தேசிய பாதுகாப்பு படை ஆய்வு
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை அலையை ஏற்படுத்தியது.ரெயில் பயணிகள் இடையே அச்சத்தையும், கலக்கத்தையும் உண்டாக்கி உள்ளது. சம்பவம் நடந்த 4 மணி நேரத்தில் சென்ட்ரல் ரெயில் நிலையம் இயல்பு நிலைக்கு மாறியது.குண்டு வெடிப்பு குறித்து விசாரணை நடந்துவதற்கான தேசிய பாதுகாப்பு படையின் வெடி குண்டு பிரிவு இன்று சென்னை வந்தது. காலை 8.30 மணிக்கு இந்த படையின் கமாண்டர் ராஜா கிருஷ்ணன் தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் சென்ட்ரல் ரெயில் நிலையம் சென்றனர்.
அங்கு 11-வது பிளாட்பிபாத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 ரெயில் பெட்டிகளையும் ஆய்வு செய்தார்கள். வெடிகுண்டு சிதறல்கள், வெடிமருந்து துகள்கள் ஆகியவற்றை பரிசோதனை செய்வதற்காக சேகரித்தனர்.
9-வது பிளாட்பாரத்தில் தண்டவாளம் சேதம் அடைந்ததையும் ஆய்வு செய்தனர். சேதம் அடைந்த பெட்டிகள், தண்டவாளம் ஆகியவற்றை புகைப்படம் எடுத்துக் கொண்டனர். குண்டு வெடித்திருந்த முறை குறித்து குறிப்புகளும் எடுத்துக் கொண்டனர்.
ரெயில் பெட்டியில் வெடித்த குண்டுகள் ஏற்படுத்திய சேதம், தண்டவாளத்தில் ஏற்பட்ட பாதிப்பு மூலம் குண்டு எந்த அளவு சக்தி வாய்ந்தது என்பதை கண்டறிய முடியும் என்று கூறப்படுகிறது.
ஒன்றரைமணி நேரம் நடந்த ஆய்வு காலை 10 மணி அளவில் முடிந்து அதன் பிறகு தேசிய பாதுகாப்பு படை அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர்.
குண்டு வெடிப்பு குறித்து விசாரணை நடந்தும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் இன்று சென்ட்ரல் ரெயில் நிலையம் வந்து விசாரணை செய்தனர். சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு விஜய குமாரி தலைமையில் வந்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டனர்.
சேதம் அடைந்த ரெயில் பெட்டிகள், தண்டவாளம் ஆகியவற்றையும் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். ரெயில்வே போலீசாரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply