இலங்கை இந்திய தலைவர்களுக்கு இடையில் இன்று சந்திப்பு

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்திக்கவுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இரு நாடுகளின் தலைவர்களும் அமெரிக்காவின் நியூயோர்க்கிற்கு விஜயம் செய்துள்ளனர். இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து ஜனதிபதி மஹிந்த ராஜபக்ச, நரேந்திர மோடிக்கு விளக்கம் அளிக்கவுள்ளார். இந்திய பிரதமர் இலங்கை ஜனாதிபதியை சந்திக்கும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியப் பிரதமர் மோடியின் பதவிப் பிரமாண நிகழ்வுகளுக்காக இலங்கை ஜனாதிபதி புதுடெல்லி சென்றிருந்த போது முதல் தடவையாக இருவரும் சந்தித்துக்கொண்டனர். தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம், 13ம் திருத்தச் சட்ட அமுலாக்கம் மற்றும் மீனவர் பிரச்சினைகள் குறித்து பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply