புதிய முதல்வராக கண்ணீர் மல்க பதவியேற்றார் ஓ. பன்னீர் செல்வம் !

சென்னை: தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இரண்டாவது முறையாக இன்று கண்ணீர் மல்க பதவியேற்றுக்கொண்டார். ஆளுநர் மாளிகையில் பிற்பகலில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் ரோசையா, ஓ.பன்னீர் செல்வத்திற்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பன்னீர் செல்வத்துடன் நத்தம் விஸ்வநாதன், மோகன், வளர்மதி,எடப்பாடி பழனிச்சாமி, செந்தில் பாலாஜி, சம்பத், செல்லூ ராஜ், காமராஜ், தங்கமணி உள்ளிட்ட பல அதிமுக  எம்.எல்.ஏ.க்களும் பதவியேற்றனர்.இந்த பதவியேற்பு விழாவில் அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

கடந்த 2001ஆம் ஆண்டு செம்படம்பர் முதல் 2002 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இரண்டாவது முறையாக ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply