ஜனாதிபதி இவ்வாரம் வத்திக்கான் பயணம் பரிசுத்த பாப்பரசரை சந்திக்க ஏற்பாடு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இவ்வாரம் பரிசுத்த பாப்பரசர் முதலாவது பிரான்ஸிஸ் ஆண்டகையைச் சந்திப்பதற்காக இவ்வாரம் வத்திக்கானுக்கான விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளார். வத்திக்கானில் பரிசுத்த பாப்பரசரைச் சந்திக்கும் ஜனாதிபதி அவர்கள் பாப்பரசரது இலங்கை விஜயத்திற்கான உத்தியோகபூர்வ அழைப்பினை இதன்போது விடுக்க வுள்ளதாக ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு (2015) ஜனவரி 13ம் திகதி பரிசுத்த பாப்பரசர் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார். அதற்கான முன்னேற்பாடுகளை கொழும்பு உயர் மறை மாவட்டம் மேற்கொண்டு வருகிறது.
இலங்கைக்கு 13ம் திகதி வருகைதரும் பரிசுத்த பாப்பரசர் பல நிகழ்வுகளில் இங்கு கலந்து கொண்ட பின்னர் 15ம் திகதி பிலிப்பைன்சுக்கு விஜயம் மேற் கொள்வார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply