சமூகங்களும் சமயங்களும் கைகோர்க்கும் போது பிள்ளைகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் : சிறுவர்தினத்தில் ஜனாதிபதி

அரசாங்கத்துடன் விகாரை, கோவில், தேவாலயம் மற்றும் பள்ளிவாசல்கள் உள்ளிட்ட சமயத்துறையும் சிவில் சமூகம் மற்றும் எனைய சமூகங்களும் உறுதியாகக் கைகோர்க்கும் போது பிள்ளைகளின் பாதுகாப்பு உண்மையிலேயே உறுதிப்படுத்தப்படுகிறது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

‘எமது பிள்ளைகளை பொக்கிஷமாய்ப் பேணுவோம்’ என்ற கருப்பொருளின் கீழ் கொண்டாடப்படும் இவ்வருட சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

ஏனைய தேசங்களுக்கு முன்னுதாரணமாக எமது சிறுவர்களுக்கு எமது பொறுப்புக்களில் பெரும்பாலானவற்றை நாம் நிறைவேற்றி இருப்பதன் மூலம் எமது மகிழ்ச்சி இச்சந்தர்ப்பத்தில் மேலும் அதிகரிக்கிறது.

எமது சிறுவர்களின் நன்மைக்காக நாம் எடுத்துள்ள நடவடிக்கைகளுள் அவர்களுக்காக எமது நாட்டை ஒரு பாதுகாப்பான இடமாக ஆக்கியிருப்பதும் உள்ளடங்கும். அதேபோன்று கல்வி, சுகாதாரம் மற்றும் போஷாக்கு போன்ற முக்கிய துறைகளில் இந்த நாட்டில் ஏனைய எந்த தசாப்தங்களை விடவும் சிறப்பான முன்னேற்றங்களை இந்த அரசாங்கம் செய்துள்ளது. எமது மிகப் பெரும் வெற்றி இந்த வசதிகளை நகரப் பிரதேசங்களுடன் மட்டுப்படுத்தாது அவற்றை கிராமப் பகுதிகளுக்கும் விஸ்தரித்தமையாகும்.

எமது சிறுவர்கள் எமது தற்போதைய அடைவுகளின் வாரிசுகளாவர். ஒழுக்க பண்பாட்டுப் பெறுமானங்கள் சிறுவர்களின் உள்ளங்களில் ஆழப் பதியவைக்கும் போது இந்த அடைவுகள் மேலும் அர்த்தமுள்ளதாகும்.எமது சிறுவர்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் வகையில் பெற்றோர்களும் வளர்ந்தவர்களும் அவர்களை மிகச் சரியாகப் புரிந்து கொண்டு அவர்களது சிறுபராயத் தேவைகள் விடயத்தில் செலுத்துவது முக்கியமானதாகும் என நான் நம்புகின்றேன்.

இத்தகைய மனோநிலை சமூகத்திலிருந்து சிறுவர் துஷ்பியோகத்தை முற்றாக ஒழித்துக் கட்ட உதவும். இது இவ்வருட சர்வதேச சிறுவர் தின கருப்பொருளான எமது பிள்ளைகளைப் பொக்கிஷமாகப் பேணுவோம் என்ற கருப்பொருளை அர்த்தப்படுத்தும்.சர்வதேச சிறுவர் தின கொண்டாட்டங்கள் முழுமையாக வெற்றிபெற எனது வாழ்த்துக்கள் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply