அமெரிக்காவில் கலிபோர்னியா மேயரை சுட்டுக் கொன்ற மனைவி
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் புறநகரில் உள்ள பெல் கார்டன்ஸ் நகர மேயராக இருந்தவர் டேனியல் கிரஸ்போ (45). இவரது மனைவி லெவெட்டோ கிரஸ்போ. இவர்களுக்கு 19 வயதில் ஒரு மகன், இருக்கிறார். இந்த நிலையில் கணவன்– மனைவிக்கு இடையே கடும் வாய் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த லெவெட்டோ கிரஸ்போ தனது கணவர் டேனியல் கிரஸ்போசை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இதில் குண்டு பாய்ந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து லெவெட்டோ கிரஸ்போவை கைது செய்தனர். கடந்த 2001–ம் ஆண்டில் பெல் கார்டன்ஸ் நகர கவுன்சில் உறுப்பினரானார். சுழற்சி முறை அடிப்படையில் அவர் மேயராக பதவி வகித்து வந்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply