சீன விண்கலம் நிலவுக்கு சென்று திரும்பியது: 8 நாள் பயணம் வெற்றி

நிலவுக்கு சென்று மீண்டும் பூமிக்கு திரும்பும் விண்கலத்தை இதுவரை அமெரிக்காவும், ரஷியாவும் மட்டுமே கண்டறிந்து சாதனை படைத்து உள்ளன. இந்தநிலையில் தற்போது இந்த சாதனையை சீனாவும் வெற்றிகரமாக நிகழ்த்தி உள்ளது. நிலவின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக அங்கு சென்று திரும்பும் வகையில் ஆள் இல்லா புதிய வகை விண்கலத்தை கடந்த வாரம் வெள்ளிக்கிழமை சீனா விண்வெளிக்கு அனுப்பியது. விண்ணில் 8 லட்சத்து 40 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்த இந்த விண்கலம், தனது பயணத்தின்போது பூமி மற்றும் நிலவை ஒன்றாக படம் எடுத்து அனுப்பியது. தனது 8 நாள் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த சீன விண்கலம், நேற்று காலை தரை இறங்கியது.
இந்த சாதனையை நிகழ்த்திய 3-வது உலக நாடு என்ற பெருமையை சீனா பெற்றுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply