பரி­சுத்த பாப்­ப­ரசர் ஜன­வரி மாதம் இலங்கை வரு­வதை உறுதி செய்­துள்ளார்

பரி­சுத்த பாப்­ப­ரசர் முதலாம் பிரான்ஸிஸ் இலங்கை வருவ­தற்­கான இறு­திக்­கட்ட ஏற்­பா­டுகள் துரி­த­க­தியில் இடம்­பெற்­று­வ­ரு­வ­தாக ஜனா­தி­பதி செய­லகம் தெரி­வித்­துள்­ளது. இது தொடர்பில் ஜனா­தி­பதி செய­ல­கத்தின் ஊடகப் பிரிவு வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது; பரி­சுத்த பாப்­ப­ரசர் முதலாம் பிரான்ஸிஸ் திருத்­தந்தை இலங்கை வரு­வ­தற்­கான அனைத்து ஏற்­பா­டு­க­ளையும் முன்­னெ­டுப்­பதில் அர­சாங்கம் தற்­போது ஈடு­பட்­டு­வ­ரு­கின்­றது.

பாப்­ப­ர­சரின் இலங்கை வரு­கை­யா­னது ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­வினால் விடுக்­கப்­பட்ட அழைப்­பை­ய­டுத்து இடம்­பெ­று­கின்­றது. கடந்த மாதம் வத்­திக்­கா­னுக்கு விஜயம் செய்­தி­ருந்த ஜனா­தி­பதி மற்றும் முதன் பெண்­மணி சிரந்தி ராஜ­பக்ஷ பாப்­ப­ர­சரின் இலங்கை விஜ­யத்­துக்­கான அழைப்பை விடுத்­தனர்.

ஜனா­தி­ப­தியின் அழைப்பை பாப்­ப­ரசர் ஏற்­றுக்­கொண்டார். அத்­துடன் எதிர்­வரும் 2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் இலங்கை வரு­வ­த­னையும் வத்­திக்கான் உறுதி செய்­தது. பாப்­ப­ர­சரின் இலங்கை வருகை வெற்­றி­க­ர­மாக அமை­வ­தற்கு வழி செய்­வ­தற்­காக ஜனா­தி­ப­தியின் வழி காட்­டலின் கீழ் அர­சாங்கம் தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுத்­து­வ­ரு­கின்­றது.

வத்­திக்­கானில் உள்ள அதி­கா­ரி­க­ளுடன் இலங்கை கத்­தோ­லிக்க திருச்­ச­பையும் அர­சாங்க அமைச்­சுக்­களும் இணைந்து செயற்­பட்­டு­வ­ரு­கின்­றன. பாப்­ப­ர­சரின் இலங்கை விஜ­ய­மா­னது வெற்­றி­க­ர­மாக அமையும் என்று அர­சாங்கம் நம்­பிக்­கை­யுடன் எதிர்­பார்க்­கின்­றது.

இதே­வேளை எதிர்­வரும் ஜன­லரி மாதம் 13 ஆம் திகதி இலங்கை வர­வுள்ள பரி­சுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் திருத்தந்தை 14 ஆம் திகதி கொழும்பில் திருப்பலி ஆராதனையை நடத்தவுள்ளதுடன் அன்றைய தினமே மடு தேவாலயத்துக்கு விஜயம் செய்யவுள்ளதுடன் அங்கு ஆசியுரையை நிகழ்த்தவுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply