மண்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியும் பிரச்சினைக்கு தீர்வு கோரியும் ஒப்பாரிப் போராட்டம்
கொஸ்லந்தை – மீரியபெத்தை தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியும் மலையக மக்களின் சொந்த வீடு, காணி பிரச்சினையை வலியுறுத்தியும் லிந்துலை – திஸ்பனை தோட்ட மக்கள் நேற்று ஒப்பாரிப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.திஸ்பனை சந்தியில் ஒன்றுகூடிய மக்கள் பதாதைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பியவாறு சவப்பெட்டி ஒன்றையும் தூக்கிக் கொண்டு ஊர்வலமாக திஸ்பனை மைதானத்திற்குச் சென்றனர். மைதானத்திற்கு சென்ற மக்கள் மலையக மக்களின் அவலத்தை கூறி,மண்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி ஒப்பாரிப் போராட்டத்தை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply