இலங்கையின் முகவராக சு.சாமி செயல்படுகிறார்!
இலங்கை அரசின் முகவராக சுப்பிரமணியசாமி செயல்படுவதாக வைகோ குற்றம்சாட்டியுள்ளார். கோவை மாநகர் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் பினாங்கு (மலேசியா) பிரகடன விளக்க பொதுக்கூட்டம் கோவை பீளமேடு புதூரில் நடந்தது.கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார், இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் என தமிழக ஊடகமான மாலை மலர் கூறியுள்ளது.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய வைகோ..
“சார்க் மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, இலங்கை ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற வாழ்த்து தெரிவித்ததுடன், அவர் வெற்றி பெற வேண்டும் என்பது எனது விருப்பம் என்றும் கூறியுள்ளார். அது 7½ கோடி தமிழர் நெஞ்சில் வேலை பாய்ப்பதாக உள்ளது.
சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு தமிழர்களை கொன்று குவிக்க காரணமாக இருந்தது. அதே வழியில்தான் நரேந்திர மோடியும் சென்று வருகிறார்.
எனவே மஹிந்த ராஜபக்ஷக்கு மோடி அளித்து வரும் ஆதரவை உடனே மாற்றிக் கொள்ள வேண்டும். தொடர்ந்து தமிழக மக்களுக்கு எதிராக செயல்பட்டு வந்தால் இலங்கையில் ஈழத்தமிழகம் கேட்பதுபோன்று தமிழக மக்களிடமும் பிரிவினை எண்ணம் ஏற்பட்டு விடும்.
மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார். இக்கருத்தை கூறிய அவரை கட்சியில் இருந்து நீக்கவில்லை.
இலங்கை அரசின் முகவராக சுப்பிரமணியசாமி திகழ்கிறார். பா.ஜ.க. கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. வெளியேற வேண்டும் என சுப்பிரமணியசாமி கூறுவதற்கு அதிகாரம் கொடுத்தது யார்?
பிரதமரின் நடவடிக்கை குறித்து கருத்து கூறியதற்காக எங்களை யாரும் பயமுறுத்த முடியாது. தமிழ் இனத்துக்காக தொடர்ந்து பாடுபடுவேன்,” எனக் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply