நிறைவேற்று அதிகாரத்தை நாட்டின் நலனுக்காக பிரயோகித்த ஒரே தலைவர் ஜனாதிபதி :பந்துல

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஏனைய ஜனாதிபதிகளை  விடவும் இந்நாட்டிற்கு அதிகளவில் துரோகம் இழைக்கப்பட்டுள்ளதா என கேள்வியேழுப்பிய கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை கொண்டு அதிகாரத்தை நாட்டின் நலனுக்காக பிரயோகித்த ஒரே தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவாகும் எனவும் சுட்டிக்காட்டினார். கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்தில்  இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்

இத் தேர்தலில் மூலம் 21 மில்லியன் மக்கள் வாழும் இந்நாட்டை ஆட்சி புரிய பொறுத்தமானவர் யார் என்பதை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும்

இலங்கையை இதுவரை 5 ஜனாதிபதிகள் கண்டுள்ளனர் அவற்றில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வினால் ஏனைய நான்கு ஜனாதிபதிகளை விடவும் இந்நாட்டிற்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளதா

ஜே.ஆர். ஜெயவர்த்தன ஜனாதிபதியின் ஆட்சியின் போதே நாட்டில் கறுப்பு ஜீலை ஏற்பட்டது. விடுதலை புலிகளின் தோற்றத்திற்கும் தமிழர்களின் வைராக்கியமும் அதிகரிப்பதற்கும் கறுப்பு ஜீலையே பிரதான காரணமாகும்

அதேபோன்று நாட்டின் பாரிய போராட்டமான ஜூன் வேலைநிறுத்தப்  போராட்டத்தின் போது தொழிலாலர்கள் பலர் சுட்டுக் கெல்லப்பட்டனர்

அதே போன்று ஆர்.பிரேமதாஸவின் ஆட்சியின் போது விடுதலை புலிகளுடன் ஒப்பந்தம் கைச்சாத்திட்டு ஆயுதங்களை வழங்கியதுடன் இந்நாட்டை இரண்டாக பிளவுபடுத்த முனைந்தனர்.

அத்தோடு ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்கவின் போது இனவாதம் போதிக்கப்பட்டது நாடு இரண்டாக பிளவுபடுத்த முனைந்தனர்.

இருப்பினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  30 வருட கால யுத்ததை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டின் சமாதானத்தை ஏற்படுத்தினார் அதேபோன்று பல அபிவிருத்திபணிகளை முன்னெடுத்தார்

எனவே மூன்றாவது முறையும் மஹிந்த ராஜபக் ஷவின் வெற்றி உறுதியானது என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply