சகல மக்களுக்கும் பாரபட்சமின்றி சேவை செய்பவர் ஜனாதிபதி மஹிந்த சந்திரசேகர சுவாமி ஜி
நாட்டில் நிலவிவந்த யுத்தத்தால் ஏற்பட்ட கொலைகளை முடிவுக்குக் கொண்டுவந்து நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், நாட்டு மக்களின் ஏனைய பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பார் என தெஹிவளை ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயத்தைச் சேர்ந்த சந்திரசேகர சுவாமிஜி தெரிவித்தார். கொலைகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு நாட்டில் அமைதி ஏற்படுத்தப்பட்டதால் மக்கள் எதுவித பயமுமின்றி நாட்டின் சகல பகுதிகளுக்கும் செல்லக்கூடிய சூழல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களாலேயே ஏற்படுத்தப்பட்டுள்ளது.வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் சகல பகுதிகளிலுமுள்ள மக்களுக்கு எதுவித பாரபட்சமுமின்றி ஜனாதிபதி அவர்கள் சேவை செய்துள்ளார். கொழும்பு நகரம் அழகுபடுத்தப்பட்டுள்ளது. பல்வேறு அபிவிருத்திகள் செய்யப்பட்டுள்ளன.
மக்களுக்குத் தேவையான ஏனைய தேவைகளையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நிவர்த்திசெய்வார் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
விலைவாசி உயர்வு, உணவுப் பிரச்சினை என்பது இலங்கையில் மாத்திரமன்றி உலக நாடுகளிலும் காணப்படும் பிரச்சினையாக உள்ளது. இதனைத் தீர்ப்பதற்கும் ஜனாதிபதி அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார் என்றும் அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply