ஆளுந்தரப்பிலிருந்து எம்.பிக்கள் கட்சிதாவுவதாக பொய்ப் பிரசாரம்
கூட்டங்களுக்கு ஆட்கள் சேர்க்கும் யுக்தியாகவே ஆளும் தரப்பு எம்.பிக்கள் எதிரணி மேடையில் ஏறவுள்ளதாக பொய்ப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக ஐ.ம.சு.மு. தலைவர்கள் தெரிவித்தனர். ஆளும் தரப்பிலிருந்து எம்.பிக்கள் வருவதாக எதிர்க்கட்சி பொய் பிரசாரங்களை பரப்பி வருகிறது. மக்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி மக்களை தருவிக்கும் உத்தியாகவே இவ்வாறு பொய் பிரசாரம் செய்யப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். வெளிநாட்டு சக்திகள், டயஸ்போராவின் தேவைப்படியே எதிர்தரப்பு செயற்படுவதாக குறிப்பிட்ட அவர்கள், சந்திரிகா – சம்பந்தன் ஒப்பந்தப்படியே வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையருக்கு வாக்களிக்க அனுமதிக்குமாறு த.தே.கூ. கோரியதாகவும் அக்கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளதாகவும் கூறினர்.
ஐ.ம.சு.மு. ஊடகவியலாளர் மாநாடு நேற்று சு.க. தலைமை யகத்தில் நடைபெற்றது. இங்கு ஐ.ம.சு.மு. செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்த, அமைச்சர் களான விமல் வீரவங்ச, வாசுதேவ நாணயக்கார, ரஞ்சித் சியம்பலாபிடிய ஆகியோர் இங்கு கருத்துத் தெரிவித்தனர்.
இங்கு உரையாற்றிய அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த, 1983 கலவரத்தினால் புலம் பெயர்ந்த வர்கள், தொழில்புரிவோர், யுத்தத்தினால் வெளிநாடு சென்று திரும்பி வர முடியாதவர்கள் என பல வகையானவர்கள் வெளிநாடு களில் உள்ளனர். வெளிநாட்டிலுள்ளவர்களுக்கு வாக்களிக்க அனுமதிக்க வேண்டுமென த.தே.கூ. கோரியுள்ளது. நாம் இதனை நிராகரித்தாலும் மைத்திரி அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவது குறித்து எதிர்தரப்பினால் விதமான கருத்துக்கள் தெரிவிக்கப்படுகிறது. எமது தேர்தல் விஞ்ஞாபனம் விரைவில் வெளியிடப்படும். சகலரும் இணங்கக் கூடிய விடயங்கள் இதில் உள்ளடக்கப்படும். பயங்கரவாதத்தை ஒழிக்கவும் நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும் தான் ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தினார் என்றார்.
அமைச்சர் விமல் அமைச்சர் விமல் வீரவங்ச கூறியதாவது,
கண்டியில் நடைபெற்ற எதிர்க்கட்சி பிரசார கூட்டத்தில் 4 ஆசனங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஆளும் தரப்பிலிருந்து 4 எம்.பிகள் வர இருப்பதாக பிரசாரம் செய்யப்பட்டது. அவர்கள் யார் என்று பார்ப்பதற்காக மக்கள் வந்திருந்தனர். ஆனால் அவ்வாறு யாருமே வரவில்லை. மக்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி தங்களுடைய கூட்டங்களுக்கு ஆட்சேர்க்கும் உத்தியையே எதிர்த்தரப்பு செய்கிறது.
இந்த கூட்டத்தில் பிக்குமாருக்கு உரிய கெளரவம் வழங்கப்படவில்லை. பொது மக்களுடனே ஆசனம் ஒதுக்கப்பட்டது. கரு ஜயசூரியவுக்கு உரையாற்ற அவகாசம் வழங்கப்படவில்லை. ஐ.தே.க. முக்கியஸ்தர்கள் ஓரங்கட்டப்பட்டு சந்திரிகா – மங்கள கும்பல் பிரசார நடவடிக்கைகளை கையிலெடுத்துள்ளது. எதிர்த்தரப்பு பேச்சாளர்களாக மங்களவும் ராஜிதவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஐ.தே.க. அநாதரவாகி நடுரோட்டில் விடப்பட்டுள்ளது.
தாம் முன்வைத்த உறுதி மொழிக்கு நியாயமாக நடக்காத எதிர்த்தரப்பு எப்படி நாட்டிற்கு நியாயமாக நடக்கும். நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதாக உறுதியளித்து அதனை நிறைவேற்றாத சந்திரிகா குமாரதுங்க பாராளுமன்றத்தை கலைக்க மாட்டேன் என ரணிலிடம் உறுதியளித்துவிட்டு அதனை கலைத்தார். இப்படியான சந்திரிகா ஜனாதிபதி முறையை ஒழிக்க மைத்திரிபாலவுக்கு இடமளிப்பாரா?
எமது அரசு கெசினோவுக்கு இடமளிப்பதாக குற்றஞ்சாட்டுகின்றனர். 2005 ம் ஆண்டின் பின் ஒரு கெசினோ சூதாட்டத்திற்கு அனுமதி வழங்கவில்லை. ஆனால் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரின் சகோதரர் கடந்த வருடம் கூடுதலாக கெசினோவுக்கு செலவிட்டு சிறந்த கெசினோ சூதாட்டக்காருக்கான காரை வென்றிருக்கிறார். மைத்திரி ஆட்சிக்கு வந்தால் நாட்டில் கெசினோ பரவும்.
எந்த ஜனாதிபதி வேட்பாளரும் தேர்தலுக்காக தமது ஆடை அலங்காரத்தை மாற்றுவதில்லை. ஆனால் மைத்திரிபால, மோடியின் ஆடை பாணியை பின்பற்றியிருக்கிறார். ஜனவரி 9ம் திகதி அதன் பிரதிபலன் தெரியும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply