பதுளையில் இன்றிரவு நிலநடுக்கம்! 600 குடும்பங்கள் வெளியேற்றம்!
பதுளை, ஹப்புத்தளை தம்பேதன்ன பிரதேசத்தில் உள்ள மவுசாக்கலை பெருந்தோட்டத்தின் சுமார் 600 தமிழ் தொழிலாளர் குடும்பங்கள் அவசரமாக சுமார் 6 கிலோமீற்றருக்கு அப்பாலுக்கு புதுக்காடு என்ற இடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. இன்று இரவு 7.45க்கும் 8 மணிக்கும் இடையில் குறித்த தோட்டத்தில் உள்ள சுமார் 10 லய்ன் குடியிருப்புகளின் கூரைகள் நிலநடுக்கத்தில் நடுங்குவதைப் போன்று சத்தத்துடன் நடுங்கியுள்ளன.இதனையடுத்து குறித்த 10 லயன்களிலும் உள்ள சிறியவர் மற்றும் பெரியோர் என சுமார் 600க்கு மேற்பட்டவர்கள் வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இந்தநிலையில் அவர்களை சுமார் 6 கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள புதுக்காடு என்ற இடத்துக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக தோட்ட முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
எனினும் குறித்த நடுக்கத்தின் போது எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை குறித்த தோட்டத்தில் ஏற்கனவே மண்சரிவு தடயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் புவிசரிதவியல் திணைக்களம் இன்றும் இந்த இடத்தை அபாயமிக்க இடமாக அறிவிக்கவில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply