அநுராதபுரம் முதலாவது கூட்டமே ஜனாதிபதியின் வெற்றியை உறுதிப்படுத்திவிட்டது

அனுராதபுரம் நகரில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டமே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அமோக வெற்றியை உறுதிப்படுத்திவிட்டதாக சிங்கள. முஸ்லிம் இன நல்லுறவுக்கான தேசிய வேலைத் திட்டத்தின் இணைத்தலைவர் அப்துல் காதர் மசூர் மெளலானா தெரிவித்தார். ஐ. ம. சு. முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் அனுராதபுரம் நகரில் நேற்று நடைபெற்றது. இக்கூட் டத்தில் மக்கள் வெள்ளம் அலை மோதியது. இப்படியான சன சமுத்திரம் அலை மோதிய கூட்டம் எதுவுமே அண்மைக்கால வரலாற்றில் இடம்பெற வில்லை.ஜனாதிபதி அவர்கள் இக்கூட்டத்திற்கு வருகை தந்ததும் அங்கு கூடியிருந்த மக்கள் வெளிப்படுத்திய உணர்வுபூர்வமான கரகோஷ ங்களும் ஜனாதிபதியின் அமோக வெற்றியை முழு நாட்டுக்குமே எடுத்துக்காட்டி விட்டன.

எதிரணியினரைப் போன்று பொய்களும், ஏமாற்று வித்தை களும் காட்டி ஐ. ம. சு. முன்னணி பிரசாரக் கூட்டத்திற்கு ஆட்கள் சேர்க்கப்படவில்லை. அவர்கள் நான்கு வெற்றுக்கதிரைகளைக் காட்டியே கண்டிக் கூட்டத்திற்கு ஆட்களைச் சேர்ந்தனர். இவர்களது ஏமாற்று வித்தைகளை முழு நாட்டு மக்களுமே நன்கு அறிந்து கொண்டனர். அதனால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாட்டு மக்கள் ஜனாதிபதி அவர்க ளுக்கு அமோக வெற்றியைப் பெற்றுக் கொடுப்பதற்குத் தீர்மானித்துவிட்டனர்.

ஜனாதிபதி அவர்கள் இந்நாட்டில் முப்பது வருடங்கள் நீடித்த பயங்கர வாதத்தைக் குறுகிய கால த்தில் ஒழித்து அச்சம் பீதியில்லாத நாட்டை உருவாக்கினார்.

அதனால் முழு நாட்டு மக்களும் ஜனாதிபதி அவர்களுக்கு நன்றிக்கடன் தெரிவிக்க ஆயத்தமாகிவிட்டனர். அதனையே அனுராதபுரக் கூட்டத்தின் மக்கள் வெள்ளம் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply