ஆப்கானிஸ்தானில் தலீபான் தாக்குதலில் 2 அமெரிக்க வீரர்கள் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆதிக்கத்தை ஒடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் படை வீரர்கள் அடங்கிய நேட்டோ படை வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர். நேட்டோ படையினரை குறி வைத்து தொடர்ந்து தலீபான்களின் தாக்குதல்கள் தொடர்கின்றன. இந்த நிலையில் தலைநகர் காபூல் அருகே பக்ராம் விமானதளத்தில் ராணுவ வாகனங்களை குறி வைத்து தலீபான்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 2 நேட்டோ படை வீரர்கள் உயிரிழந்தனர். இவர்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்று அமெரிக்க உள்துறை உறுதி செய்துள்ளது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply