அவுஸ்த்திரேலியா சிட்னியில் ஐஸிஸ் பயங்கரவாதிகளால் பணயக் கைதிகள் சிறைப்பிடிப்பு !
அவுஸ்த்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பிரபல உணவு விடுதியொன்றினுள் புகுந்துகொண்டுள்ள இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகளான ஐஸிஸ் குழுவினர், அங்கேயிருந்த மக்களை பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதுடன், வெளியிலிருந்து பொலிஸார் நடத்தவிருக்கும் எந்தவிதமான தாக்குதல்களையும் தடுப்பதற்காக பணயக்கைதிகளை கண்ணாடி யன்னல்களின் முன்னால் கைகளை உயர்த்தியபடி நிற்க வைத்திருக்கிறார்கள்.யன்னல் ஒன்றின் முன்னால், “அல்லாவே ஒரே கடவுள், வெறொருவரில்லை” என்கிற இஸ்லாமிய அடிப்படைவாதப் பதாதையும் தொங்கவிடப்பட்டிருக்கிறது. சிட்னியின் பிரபல சனநடமாட்டம் மிகுந்த மார்ட்டீன் பிளேஸ் எனும் பகுதியில் அமைந்திருந்த இந்த உணவகத்தினுள் காலை 10 மணிக்குச் சற்றுமுண்ணர் நுழைந்த பயங்கரவாதிகள் இந்த பணயக்கைத்திகளைப் பிடித்து வைத்திருக்கின்றனர்.
நகரின் பிரதான வீதிகள் அனைத்தும் மூடப்பட்டு, கனரக ஆயுதம் தரித்த பயங்கரவாத எதிர்ப்புப் போலிஸார் அந்த கட்டிடத்தை சூழ்ந்துகொண்டிருக்கின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply