அயோத்தியில் ராமர் கோவில் கட்டியே தீருவோம்: ராகவரெட்டி பேட்டி
திருப்பதியில் இந்து சம்மேளனம் சார்பில் ‘‘ஸ்ரீராம மகா யாகம்’’ ராமச்சந்திர தீர்த்த குளம் அருகே நடந்தது. இதில் விசுவ இந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச தலைவர் ராகவ ரெட்டி கலந்து கொண்டார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது . பிரதமர் நரேந்திரமோடி நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு வருவார் என்று நம்பிக்கை வைத்து மக்கள் அவரை தேர்ந்து எடுத்து உள்ளனர். அந்த நம்பிக்கையை மோடி நிறைவேற்றுவார்.பசுவதை தடை சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். விரைவில் இந்த சட்டம் கொண்டு வரப்படும்.
அறங்காவலர் வசம் இல்லாத 100 கோவில்களை தத்து எடுக்க உள்ளோம். அதன் மூலம் கோவில் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதை காட்டுவோம்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதில் விசுவ இந்து பரிஷத் இனி முழு கவனம் செலுத்தும். எப்படியும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டியே தீருவோம்.
இந்து மதத்தை காப்பாற்றுவதில் ஒவ்வொரு இந்துக்களுக்கும் கடமை உள்ளது. மத மாற்ற செயலை கட்டுப்படுத்த அவர்கள் முன் வரவேண்டும். ஆண்டுக்கு 40 ஆயிரம் பேர் மத மாற்றம் செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது. மத மாற்றத்தை கட்டுப்படுத்தும் பணியில் விசுவ இந்து பரிஷத் தொண்டர்கள் தனியாக நியமிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply