தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண்­ப­வ­ருக்கே எமது ஆத­ரவு:சித்­தார்த்தன்

இனப்­பி­ரச்­சி­னைக்கும் தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் நடை­மு­றைப்­பி­ரச்­சி­னை­க­ளுக்கும் ஒரு தீர்வை முன்­வைக்­கக்­கூ­டிய வேட்­பா­ள­ருக்கே தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு ஆத­ரவு வழங்கும். இவ்­வி­டயம் தொடர்பில் கூட்­ட­மைப்­பா­னது ஆராய்ந்து தீர்­மானம் எடுக்கும். கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் நாடு திரும்பும் வரை இதற்­காக காத்­தி­ருக்­கின்றோம் என்று தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் வட­மா­கா­ண­சபை உறுப்­பி­னரும் புௌாட் அமைப்பின் தலை­வ­ரு­மான தர்­ம­லிங்கம் சித்­தார்த்தன் தெரி­வித்தார்.ஜனா­தி­பதி தேர்தல் தொடர்பில் கருத்துத் தெரி­வித்த அவர் மேலும் கூறி­ய­தா­வது:-

ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிடும் இரு பிர­தான வேட்­பா­ளர்­களும் தமது பரப்­பு­ரை­களின் போது தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் சாத­க­மான கருத்­துக்­களை கூற­வில்லை. மாறாக எதிர்­ம­றை­யான கருத்­துக்­க­ளையே தெரி­வித்து வரு­கின்­றனர். சிங்­கள பெரும்­பான்­மை­யின மக்­களின் வாக்­கு­களை பெறு­வ­தற்­கா­கவே இவ்­வாறு எதிர்­ம­றை­யான கருத்­துக்­களை இரு­பெரும் வேட்­பா­ளர்­களும் தெரி­வித்து வரு­வ­தா­கவே தெரி­கின்­றது.

இவ்­வா­றான கருத்­துக்­களைக் கேட்டு சிங்­கள மக்கள் வாக்­கு­களை வழங்­கு­கின்­ற­போது இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வுக்கு சிங்­கள பெரும்­பான்­மை­யின மக்கள் ஆத­ரவு வழங்­காத சூழ்­நிலை ஏற்­பட்டு விடும்.

எதிர்­ம­றை­யான கருத்­துக்­களை கேட்கும் சிங்­கள மக்கள் தீர்­வுக்கு இணங்­க­மாட்­டார்கள். கடந்­த­கா­லங்­களில் இத்­த­கைய அனு­ப­வங்­களை நாம் பெற்­றுள்ளோம். இந்த நிலையில் தீர்க்­க­மாக ஆராய்ந்தே தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு முடிவு எடுக்க வேண்­டிய நிலை காணப்­ப­டு­கின்­றது. தமிழ் மக்­களின் இனப்­பி­ரச்­சி­னைக்கும் அவர்­க­ளது நடை­மு­றைப்­பி­ரச்­சி­னைக்கும் ஒரு நியா­ய­மான தீர்வை வழங்­கக்­கூ­டி­ய­வ­ருக்கே கூட்­ட­மைப்பு ஆத­ரவை வழங்க முடியும்.

திட்­ட­மிட்ட குடி­யேற்­றங்­களை தடுக்கும் வகை­யிலும் மீள் குடி­யேற்­றத்­தினை மேற்­கொள்ளும் வகை­யிலும்இ செயற்­ப­டக்­கூ­டி­ய­வ­ருக்கே ஆத­ரவு அளிக்க முடியும். இத்­த­கையப் பிரச்­சி­னைக்­கான தீர்வினை தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிப்பவருக்கே ஆதரவு வழங்கும் சூழல் காணப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி. நாடு திரும்பியதும் விரிவாக ஆராய்ந்து தீர் மானம் ஒன்றுக்கு கூட்டமைப்பு வரும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply