பொது வேட்பாளராக யார் வந்தாலும் ஜனாதிபதியே வெற்றி பெறுவார் : நிமல்

பொது வேட்பாளராக யார் களமிறக்கப்பட்டாலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே மீண்டும் ஜனாதிபதியாவார். அவரை வெல்வதற்கு யாராலும் முடியாது என்று சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதுளை அலுவலகத்தில் இடம்பெற்ற ஆதரவாளர் சந்திப்பின் போது பேசுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அமைச்சர் நிமல் இங்கு மேலும் கூறுகையில்,அரசாங்கம் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு ஏனைய அரசாங்கங்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது. தோட்டங்கள் தோறும் கொங்கிறீட் வீதிகள் அமைத்து நகரத்தினையும் தோட்டத்தினையும் அபிவிருத்தி செய்து வருகின்றது. எனவே ஆசியாவின் ஆச்சரியமிக்க நாடாக இலங்கையினை மாற்றி வருகின்றது. மேலும் இவ்வருடம் இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தில் கூட அரச ஊழியரின் சம்பளம் அதிகரித்து பல அத்தியாவசிய சேவைகளின் தேவையினை உணர்ந்து அதிக நிதியினை அதிகரித்து நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும் விதத்தில் 2015 ஆம் ஆண்டிற்கான பட்ஜட்டினை ஜனாதிபதி அறிமுகம் செய்துள்ளார். ஆதலால் மக்கள் அரசின் பக்கம் உள்ளனர்.

இதனை சகித்துக் கொள்ளாத எதிர்க்கட்சியினர் பலரும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். இவை மக்களிடம் சென்றடைவதில்லை. ஆகையால் எத்தனை பொது வேட்பாளர்களை எதிரணியினர் நிறுத்தினாலும் மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அதிக விருப்பு வாக்குகளால் வெற்றி பெறுவது உறுதி. இதனை யாரும் மறுக்க முடியாது என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply