எமது போராட்டம் முடிவடையவில்லை:மஹிந்த ராஜபக்ஷ
பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து விரட்டி அடித்தாலும் பிரிவினைவாதிகள் வெளிநாடுகளில் இருந்துகொண்டு தனிபாராளுமன்றம் மற்றும் அமைச்சரவை அமைத்து நாட்டுக்கு எதிராக செயற் பட்டு வருவதாகவும் அவர்களுக்கு எதிரானநடவடிக்கையினை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்ல வேண்டியிருப்பதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பாணந்துறை மக்கள் விளையாட் டரங்கில் இடம்பெற்ற மக்கள் சந்திப் பொன்றில் கலந்துகொண்டு நேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். கொட்டும் மழைக்கு மத்தியில் திரண்டிருந்த மக்களிடையே பேசிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்ததாவது,கடந்த 2009 மே மாதம் 19 ஆம் திகதி பயங்கரவாததை நாம் நாட்டிலிருந்து தோற்கடித்தோம். எனினும் வெளி நாட்டில் உள்ள பிரிவினை வாதிகள் தனியான பாராளுமன்றம், அமைச்சரவை அமைத்து கொண்டு அவர்களது இலக்கை நோக்கி நகர்கின்றனர். எனவே எமது போராட்டம் இன்னும் முடிவடையவில்லை.
அதனால் எதிர்வரும் ஜனவரி மாதம் 08 ஆம் திகதி நீங்கள் அனைவரும் வெற்றிலை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். அப்படியானால் மறு நாள் ஒன்பதாம் திகதி அனைவரும் பாற்சோறு உண்டு மகிழ முடியும்.
பிரிவினைவாதத்துக்கு எதிராக கடுமையான நடவ்டிக்கைகளை முன்னெடுத்துவரும் நாம் உங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் தவறவில்லை. வாழ்க்கை தரத்தை உயர்த்த நாம் தற்போது முன்னெடுத்துள்ள அனைத்து நடவ்டிக்கைகளையும் எவ்வித தடங்களும் இன்றி தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வோம். உங்கள் பிள்ளைகளின் கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் அபிவிருத்தி செய்யும் நாம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்துவோம். எனவே உங்கள் அனிவருக்கும் வெற்றி உண்டாகட்டும். என குறிப்பிட்டார்.
சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பாணந்துறை தொகுதி அமைப்பாளர் அமைச்சர் ரெஜினால்ட் குரே ஏற்பாடு செய்திருந்த இந்த மக்கள் சந்திப்பில் அமைச்சர்களான ஜீ.எல்.பீரிஸ், வாசுதேவ நாணயக்கார, குமார வெல்கம, பவித்ரா தேவி வண்ணியாரச்சி, ரோஹித்த அபே குணவர்தன, நிமல் சிறிபால டீ சில்வா, திஸ்ஸ அத்தனாயக்க பிரதியமைச்சர் நிர்மல கொத்தலாவல உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி நேற்று பல்வேறு கூட்டங்களுக்கு சமூகமளித்திருந்த நிலையில் பாணதுறை மக்கள் சந்திப்புக்கு வருகை தர தாமதமானது. எனினும் மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வரும் வரை காத்திருந்ததுடன்,மக்களை நோக்கிய தனது உரையினை ஒரு சில நிமிடங்களிலேயே ஜனாதிபதி நிறைவு செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply