வெளிநாடுகளிலுள்ள இலங்கையரின் கறுப்பு பணத்தில் வறுமையை போக்குவோம் : டாக்டர் ராஜித சேனாரத்ன
அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர், 5.2 பில்லியன் அமெரிக்க டொலர் கறுப்புப் பணத்தை வெளிநாட்டு வங்கியொன்றில் வைப்பிலிட்டுள்ளார் என பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பேச்சாளரும் முன்னாள் அமைச்சருமான டாக்டர் ராஜித சேனாரத்ன, தெரிவித்தார். சக்திவாய்ந்த அரசியல்வாதிகளால் வைப்பு செய்யப்படும் இந்த கறுப்பு பணத்தை இலங்கைக்கு கொண்டுவந்து, நாட்டின் அபிவிருத்திக்காகவும் ஏழைகளின் உயர்வுக்காகவும் பயன்படுத்தப்படும் என அவர் கூறினார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘மக்களுக்கு ஆறுதல் வழங்க இந்த கறுப்புப் பணம் போதுமானது’ எனவும் அவர் கூறினார்.
இலங்கைக்கு தற்போது நிதி வழங்கும் நாடுகள், புதிய அரசாங்கம் வந்தாலும் தமது உதவியைத் தொடர்வதாக உறுதியளித்துள்ளன. எதிர்வரும் 19 வெள்ளிக்கிழமையன்று, பொது வேட்பாளர் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுவார் என்றும் அவர் கூறினார்.
தற்போது நடப்பவற்றைப் பார்த்துக்கொண்டு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் தன்னால் இருக்க முடியவில்லை எனக் கூறி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சட்டத்தரணிகள் சங்க முக்கியஸ்தரான நீத் உதேஷா, பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர மாநகரசபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினராக தனுக விஸ்வஜித்தும் பொது வேட்பாளர் குழுவுடன் சேர்ந்துள்ளார்.
குறிப்பாக, நகர குடியிருப்பு விடயத்தில் ஆளுங்கட்சியின் கொள்கைகளுடன் உடன்பட முடியாது. கோட்டே பகுதியிலிருந்து விரைவில் மக்களை வெளியேற்ற அரசாங்கம் தயாராகி வருகின்றது என்றும் ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply