ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் விவசாய அமைச்சருக்கு காயம்

இன்று காலை 9.3௦ மணியளவில் யாழ். மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பெரும் கைகலப்பு இடம்பெற்றுள்ளது. வடமாகாணசபை ஆளுங்கச்சியினருக்கும் எதிர்கட்சியினருக்கும் இடையே இடம்பெற்ற கருத்து மோதலையடுத்து தண்ணீர் போத்தல்களால் இருதரப்பினரும் தண்ணீர் போத்தல்களால் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது வடக்குமாகாண விவசாய அமைச்சர் பொ.  ஐங்கரநேசனுக்கு இரத்தக்காயம் ஏற்பட்டதை அடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வெளிநடப்பு செய்துள்ளனர். இதனையடுத்து குறித்த கூட்டம் திகதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply