தமிழ் தேசிய கூட்டமைப்பு கள்வரின் கூடாரமா? – கே.சிவாஜிலிங்கம் கேள்வி

தமிழ் தேசிய கூட்டமைப்பு கள்வரின் கூடாரமா என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பினார்.யாழ். ஊடக அமையத்தில் நேற்று திங்கட்கிழமை மதியம் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார். ஆவர் அங்கு மேலும் கூறுகையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்துரையாடல் ஒன்று வவுனியாவில் நடைபெற்றது.ஆந்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்த கருத்துக்களுக்கு விளக்கமளிக்க வேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளது.

ஆந்தவகையில், 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், 45 கோடி ரூபாவினை பெற்றுக்கொண்டு மகிந்த ராஜபக்ஷ விற்கு ஆதரவாக போட்டியிட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மகிந்தராஜபக்~விற்கு எதிரான இனப்படுகொலை என்ற தீர்மானத்தினை கொண்டு வந்ததற்கும், மகிந்த ராஜபக்ஷ விடம் பணம் வாங்கிக்கொண்டு தான் இனப்படுகொலைக்கான தீர்மானத்தினை கொண்டு வந்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள இரு நபர்களும் பிரியோசனமற்றவர்கள். அதை எண்ணி மக்கள் குழப்பமடைய வேண்டாம். முக்கள் யோசித்து முடிவு எடுக்க வேண்டுமென்றும் அவர் கூறினார்.

ஆனால், அதி கூடிய துன்பத்தினை விளைவித்தவரை அகற்ற வேண்டுமென்ற மனநிலை மக்களுக்கு இருக்கின்றது என்றார். ஒரு லட்சத்திற்கு அதிகமான காணிகள் தற்போது சுவீகரிக்கப்பட்டு வருகின்றது. அதில் 90 வீதமான காணிகளை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் தருவேன் என்று மைத்திரி பால சிறிசேன தெரிவித்தார்.

ஆதை சிங்கள மக்கள் மத்தியில் சொல்வதற்கு பிரச்சினை இல்லை. 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் பணம் வாங்கியிருந்தால், ஏன் வடமாகாண சபை தேர்தலில் போட்டியிட அனுமதித்தீர்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

துமிழ்தேசிய கூட்டமைப்பில் கள்வர்கள் இருக்கின்றார்களா? ஆப்படியானால், தமிழ் தேசிய கூட்டமைப்பு கள்வரின் கூடாரமா என்று கேள்வி எழுப்பியதுடன், ஜனாதிபதியிடம் வாங்கிய பணத்தினை வைப்பதற்கு இடம் ஒன்றினை தருமாறும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply