பாகிஸ்தானில் உள்ள பெஷாவரில் பள்ளிக்குள் புகுந்து தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு: 125 குழந்தைகள் பலி
பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள ராணுவ பொது பள்ளி மற்றும் கல்லூரிக்குள் புகுந்த தெரிக்-இ-தலிபான் இயக்க தீவிரவாதிகள் பள்ளியில் இருந்த குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 125 குழந்தைகள், ஒரு ஆசிரியர், ராணுவ வாகன ஓட்டுனர் ஆகியோர் கொல்லப்பட்டனர். மேலும் படுகாயமடைந்த ஏராளமான குழந்தைகள் மருத்துவனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தவிர பள்ளிக்குள் மேலும் 500 மாணவர்களை தீவிரவாதிகள் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். தீவிரவாதிகள் ராணுவ உடையணிந்து பள்ளிக்குள் நுழைந்ததாக இச்சம்பவத்தை பார்த்த ஒருவர் கூறியுள்ளார்.இந்த சம்பவத்திற்கு தெரிக்-இ-தலிபான் அமைப்பு பொறுப்பேற்பதாக கூறியுள்ளதுடன், ஆறு தீவிரவாதிகளும் தற்கொலைப்படையாக பள்ளிக்குள் புகுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
தீவிரவாதிகள் பள்ளிக்குள் புகுந்ததையடுத்து பள்ளியை சுற்றி வளைத்த பாகிஸ்தான் ராணுவம் தீவிரவாதிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது. இரு தரப்புக்கும் இடையே கடும் சண்டை நீடித்துவரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என தெரிகிறது.
தீவிரவாதிகளின் இச்செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரிப், உடனடியாக பெஷாவருக்கு விரைந்துள்ளார். இச்சம்பவத்தில் குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர் கதறி துடிப்பது காண்பவர்கள் நெஞ்சை கலங்க வைக்கின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply