பள்ளியில் விடுமுறை கிடைக்கவில்லை : இந்தியப் பயணத்தை தவறவிட்ட ஒபாமா மகள்கள்

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வரும் ஞாயிறன்று இந்தியா வர உள்ளார். ஆனால், அவரது மகள்களுக்கு பள்ளியில் விடுமுறை கிடைக்காததால், அவர்கள் ஒபாமாவுடன் இந்தியப் பயணத்தில் பங்கேற்கவில்லை. ஒபாமாவுடன் அவரது மனைவி மிசிசிலி ஒபாமா மட்டுமே உடன் வருகிறார். இந்தியாவில் 3 நாள் சுற்றுப் பயணமாக வருகை தர உள்ளார் அமெரிக்க அதிபர் ஒபாமா. 25ம் தேதி தில்லி வரும் அவர், ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மகாலை சுற்றிப் பார்க்க உள்ளார்.

வழக்கமாக உலக நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செல்லும் ஒபாமாவுடன், அவரது மனைவி மற்றும் மகள்களும் வருவது வழக்கம். ஆனால், இந்திய பயணத்துக்காக பள்ளியில் விடுமுறை கேட்ட போது, ஒபாமாவின் மகள்களான சசா மற்றும் மலியாவுக்கு பள்ளி நிர்வாகம் விடுமுறை வழங்க மறுத்துவிட்டதால், இந்தியப் பயணத்தை அவர்களால் மேற்கொள்ள முடியாமல் போனதாக அமெரிக்க பாதுகாப்பு துணை ஆலோசகர் செய்தியாளர்களிடம் அறிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply