ஒபாமா மனைவிக்காக 100 பட்டு சேலைகள் கொள்முதல்

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுடன் அவருடைய மனைவி மிச்செலும் இன்று இந்தியாவுக்கு வருகிறார். இந்நிலையில், மிச்செலை கவருவதற்காக, மத்திய அரசு நிறுவனமான மத்திய குடிசைத்தொழில் கழகம், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் சுமார் 100 பனாரஸ் பட்டு சேலைகளை கொள்முதல் செய்துள்ளது.கழகத்தின் துணை மேலாளர் அனுபா மார்வாவும், அதிகாரிகளும் சேர்ந்து இரண்டு நாட்களாக தேடி அலைந்து இந்த சேலைகளை வாங்கி உள்ளனர். அவை டெல்லியில் உள்ள வணிக மையத்தில் வைக்கப்பட்டுள்ளன. ஒபாமா மனைவி மிச்செல் அங்கு வந்தால், அவருக்கு அந்த சேலைகளை காண்பித்து விற்பனை செய்ய திட்டமிட்டு இருப்பதாக மத்திய குடிசைத்தொழில் கழக பொது மேலாளர் வி.கல்யாண சுந்தரம் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply