வாஷிங்டனில் இருந்து புறப்பட்டார் ஒபாமா- நாளை காலை 10 மனியளவில் டெல்லி வந்து சேருவார்
இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக புது டெல்லி வரவுள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வாஷிங்டன் நகரில் இருந்து தனது பிரத்யேக ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ விமானம் மூலம் புறப்பட்டார். வாஷிங்டனில் உள்ள ஆண்ட்ரூஸ் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அமெரிக்க அதிபரின் சிறப்பு விமானத்தில் அவரது மனைவி மிச்சேல் ஒபாமா மற்றும் அமெரிக்க அரசின் முக்கிய உயரதிகாரிகள் உடன் வருகின்றனர்.
வழியில், ஜெர்மனியின் ரம்ஸ்ட்டின் நகரத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக ஒபாமாவின் விமானம் இன்றிரவு தரையிறங்கும். அப்போது அங்கு சற்று நேரம் ஓய்வெடுக்கும் ஒபாமா, மீண்டும் புறப்பட்டு நாளை காலை சுமார் 10 மணியளவில் புதுடெல்லி வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. பகல் 12 மணியளவில் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும், பிரதமர் நரேந்திர மோடியும் ஒபாமாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கின்றனர்.
பின்னர் ராஜ்கோட்டுக்கு செல்லும் அவர், மகாத்மா காந்தி சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். அங்கு நடைபெறும் மரம் நடும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். பின்னர், டெல்லியில் உள்ள ‘ஐதராபாத் ஹவுஸ்’-ல் ஒபாமாவுக்கு பிரதமர் மோடி மதிய விருந்தளிக்கிறார். இந்த விருந்தின்போது இரு நாடுகளின் தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிக்கின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply