எல்லையில் அத்துமீறினால் இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான்

எல்லையில் அத்துமீறலில் ஈடுபடும் இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுடன் நடைபெற்று வந்த வெளியுறவுத்துறை செயலாளர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை கடந்த ஏழு மாதங்களாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நாட்டின் புதிய வெளியுறவுத்துறை செயலாளராக ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டார். அவருடன் பாகிஸ்தான் வெளியுறவு துறை செயலாளர் தொலைபேசியில் பேசியதாக கூறப்பட்டது. இதை தொடந்து வருகிற மார்ச் 3-ம் தேதி இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் இரண்டு நாள் பயணமாக பாகிஸ்தான் செல்வார் என்ற அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி பாகிஸ்தான் எல்லை பகுதியில் அத்துமீறலில் இந்தியா ஈடுபடுமானால், அதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று ரஹீல் செரீப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது வெளியுறவுத்துறை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

எல்லை பிரச்சனைகள் குறித்து இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கரின் பயணத்தின் போது பாகிஸ்தான் பேசி முடிவெடுக்கும் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தி வெளியிட்டுள்ள நிலையில் ராணுவ தளபதி இவ்வாறு பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply