ஒரே நிகழ்ச்சியில் மோடியும், சோனியாவும் : வணக்கத்தை பரிமாறிய தலைவர்கள்

தில்லியில் நடைபெற்ற சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் பேரன் – லாலு யாதவ் மகள் திருமணம் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மோடியும், சோனியாவும் மரியாதை நிமித்தமாக வணக்கத்தை பரிமாறிக் கொண்டனர்.அரசியலில் முக்கியத் தலைவர்களான முலாயம் மற்றும் லாலுவின் குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, மணமக்களை வாழத்தினார். காங்கிரஸ் தலைவர் சோனியாவும் நிகழ்ச்சிக்கு வந்து விழாவை சிறப்பித்தார்.

இரு தலைவர்களும் ஒரே நேரத்தில் சந்தித்த போது எதுவும் பேசிக் கொள்ளவில்லை. ஆனால் ஒருவருக்கு ஒருவர் மரியாதையோடு வணக்கத்தை தெரிவித்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங், மன்மோகன் சிங், அத்வானி, பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட பல முக்கியப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply