முதலில் உள்ளூர் இடம்பெயர்ந்தோர் அதன் பின்பே தமிழகத்திலுள்ளோர் வடபகுதி விஜயத்தின்போது : அமைச்சர் சுவாமிநாதன்
எந்த அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படாமல் தமி ழகத்தில் உள்ள அகதிகளை அழைத்து வர முடியாது என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து அகதிகளை அழைத்து வருவதற்கு முன்னர் வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப் பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளில் உள்ளவர்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும். அவர்கள் இழந்த காணிகளை திரும்ப பெற்றுக் கொடுக்க வேண்டும். அதன் பின்னர் இந்திய அரசின் ஒத்துழைப்புடன் ஒரு தீர்மானத்திற்கு வரவேண்டும்.
இந்தியாவில் இருந்து வருவதற்கு 20 முதல் 30 வீதமானவர்கள் மாத்திரமே விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்கள் இங்கு வந்து வசிக்க தேவையான அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்ட பின்னரே அவர்கள் இங்கு வரவழைக்கப்படுவர்.
இந்தியாவிலிருந்து வரவுள்ளவர்களுக்கு இங்கு காணி இருக்குமாயின் அவர்கள் வருவதில் எனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை எனக் குறிப்பிட்டார். பொது மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பது 20 வருடங்களுக்கு மேலாக இருக்கின்ற பிரச்சினையாகும். இதனை குறுகிய நாட்களுக்குள் தீர்க்க முடியாது. எனது கடமையை நான் உணர்ந்து செல்லும் இடங்களிலுள்ள பிரச்சினைகளை படிப்படியாக தீர்ப்பேன்.
“வலிகாமம் வடக்கு – கிழக்கு பகுதிகளில் காணி ஆயிரம் ஏக்கர் கிடைத்திருக்கின்றது. அக்காணிகளில் எவ்வாறு மீள்குடியேற்றம் செய்வது என்பது தொடர்பாக வடமாகாண ஆளுநர் எச்.என். ஜி.எஸ். பளிஹக்காரவுடனும் இராணுவத்துடனும் கலந்துரையாடப்படும்” என்றார்.
யாழ்ப்பாணத்தில் ஆயிரம் ஏக்கர் காணிகளில் மக்களை 3 கிழமைக்குள் மீள்குடியமர்த்துவதற்கான செயற்குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் வலளாய் மாதிரி கிராமத்திட்டம் கைவிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply