ஈராக்கில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 37 ஆக உயர்வு

ஈராக்கில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 37 பேர் பலியாகினர்.ஈராக்கில் பெரும் பகுதியை ஐ.எஸ்.தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். அவர்கள் அங்கு ஷியா பிரிவினரை குறி வைத்து தாக்குதல் நடத்துகின்றனர். தலைநகர் பாக்தாத் அருகே நேற்று தொடர்ந்து வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தினர்.பலாட் ருஷ் நகரில் மக்கள் கூடும் மார்க்கெட்டில் குண்டு வெடித்தது. அதில் 11 பேர் பலியாகினர். 50 பேர் காயம் அடைந்தனர். அடுத்த படியாக சமாரா நகரில் ஷியா பிரிவு தீவிரவாதிகளின் சோதனைசாவடியின் மீது 2 கார் குண்டு தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது.இந்த தாக்குதலில் 16 ஷியா தீவிரவாதிகள் பலியாகினர். 31 பேர் காயம் அடைந்தனர்.

பாக்தாத்தில் நடந்த குண்டு வெடிப்பில் 4 பேரும், அபுதவ்ஹிரில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 3 பேரும் உயிரிழந்தனர்.சபா அல்–போர் நகரில் மோட்டார் குண்டுகள் வீசப்பட்டன. இச்சம்பவத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர். 6 பேர் காயம் அடைந்தனர். நேற்று நடந்த வெடிகுண்டு தாக்குதல்களில் 37 பேர் பலியாகினர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply