இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தலில் சிக்கிய 2 ஆஸ்திரேலியர்களை சுட்டுக்கொல்ல முழுவீச்சில் ஏற்பாடு

இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய 2 ஆஸ்திரேலியர்களை சுட்டுக்கொல்வதற்கு முழுவீச்சில் ஏற்பாடு நடக்கிறது. இதுகுறித்து அறிந்த ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்பாட் கடும் அதிர்ச்சி அடைந்தார். இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் சிக்கியவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகிறது. இதில் அந்த நாட்டின் அதிபர் ஜோகோ விடோடோ தீவிரமாக உள்ளார்.

இந்த நிலையில், அங்குள்ள பாலியில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு 8 கிலோ ஹெராயின் போதைப்பொருளை கடத்த

முயன்ற வழக்கில் ஆஸ்திரேலியர்களான ஆண்ட்ரூ சான் (வயது 31), மயூரன் சுகுமாரன் (33) ஆகியோர் சிக்கினார்கள்.

இவர்களுக்கு 2005-ம் ஆண்டு அந்த நாட்டு கோர்ட்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. அவர்களை மரண தண்டனையிலிருந்து காப்பாற்றுவதற்கு தூதரக ரீதியில் ஆஸ்திரேலிய அரசு எத்தனையோ நடவடிக்கைகள் எடுத்து வந்தது. ஆனால், இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ அதில் பிடிகொடுக்கவில்லை.

இதனால் இரு நாடுகளின் ராஜ்ய உறவு பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்த நிலையில் பாலி சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆண்ட்ரூ சான், மயூரன் சுகுமாரன் ஆகியோர் நேற்று அதிகாலையில் அங்கிருந்து ஒரு கவச வாகனத்தில் போலீஸ் பாதுகாப்புடன் ஏற்றப்பட்டனர். அவர்கள் தென்பசார் விமான நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கிருந்து சிலாகேப் என்ற இடத்துக்கு விமானத்தில் அழைத்துச்செல்லப்பட்டனர்.

பின்னர் அங்கிருந்து நுசகம்பன்கன் தீவுக்கு படகில் அழைத்துச்செல்லப்பட்டு, சிறைக்கு கொண்டு சென்று அடைக்கப்பட்டனர். அவர்களை சுட்டுக்கொல்வதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

பாலி சிறையில் இருந்து புறப்பட்டபோது, சுகுமாரன் தன்னுடன் ஒரு பையில் பென்சில்கள், ஒரு பைபிள், டிராயிங்

புத்தகம் ஆகியவற்றை எடுத்துச்சென்றார். சிறையில் இருந்து விடைபெற்றபோது சக நண்பர்களிடம், “ நன்றி

நண்பர்களே, உங்கள் உடல் நலத்தைக் கவனித்துக்கொள்ளுங்கள்” என்று கூறியதாக சிறை அதிகாரி சுத்ஜாங்கோ

தெரிவித்தார்.

ஆண்ட்ரூ சானை அவரது மூத்த சகோதரர் மைக்கேல் சான் சந்திக்க வந்ததாகவும், ஆனால் சிறை நிர்வாகம் அவருக்கு

அனுமதி வழங்க மறுத்து விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

மரண தண்டனையை நிறைவேற்றுவதற்காக சுகுமாரனும், சானும் சிறை மாற்றப்பட்ட தகவல் அறிந்த ஆஸ்திரேலிய

பிரதமர் டோனி அப்பாட் கடும் அதிர்ச்சி அடைந்தார். இருப்பினும், தனது நாட்டினர் 2 பேரின் உயிரைக்காக்க

முயற்சிகள் தொடரும் என குறிப்பிட்டார்.

இவர்கள் இருவரும் மரண தண்டனைக்கு எதிராக எத்தனையோ முறை அப்பீல் செய்து விட்டனர். அத்தனையும்

நிராரிக்கப்பட்டு விட்டது. அவர்களது கருணை மனுவை அதிபர் ஜோகோ விடோடோ தள்ளுபடி செய்ததை எதிர்த்தும்

அவர்கள் அப்பீல் செய்துள்ளனர். அது நிலுவையில் உள்ளது.

இந்த அப்பீல் மீது முடிவு எடுப்பதற்குள் மரண தண்டனையை நிறைவேற்றினால் அது சட்ட மீறல் என்று

அவர்களுக்காக ஆஜராகி வரும் வக்கீல் பீட்டர் மோரிசே கருத்து தெரிவித்தார்.

இருப்பினும் சிறை மாற்றம் செய்யப்பட்டு விட்டதால், எந்த நேரத்திலும் அவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதற்கான

வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply