“கைது செய்யப்படாமல் இருந்திருந்தால் ஒபாமா தலையில் சுட்டிருப்பேன்’

அதிகாரிகள் என்னைக் கைது செய்யாமல் இருந்திருந்தால் அதிபர் ஒபாமா தலையில் துப்பாக்கியால் சுட்டிருப்பேன்’ என பயங்கரவாதக் குற்றச்சாட்டில் சிறையிலடைக்கப்பட்டுள்ள கிறிஸ்டோபர் லீ கார்னெல் (20) என்பவர் தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியில் கூறினார். பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்த சதித் திட்டம் தீட்டியதாக அமெரிக்காவின் தேசியபுலனாய்வு அமைப்பு (எஃப்.பி.ஏ.) அதிகாரிகள் கடந்த ஜனவரி மாதம் 14-ஆம் தேதி அவரைக் கைது செய்தனர்.

துப்பாக்கி அங்காடியில் இரண்டு இயந்திரத் துப்பாக்கிகள், 600 தோட்டாக்களை வாங்கியபோது அவர் கைது செய்யப்பட்டார்.இந்த நிலையில், உள்ளூர் தொலைக்காட்சிக்கு கிறிஸ்டோபர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

எஃப்.பி.ஐ. அதிகாரிகள் என்னைக் கைது செய்யாமல் இருந்திருந்தால், அதிபர் ஒபாமாவின் தலையில் துப்பாக்கியால் சுட்டிருப்பேன். அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டிருப்பேன்.

அதற்குப் பின்பு இஸ்ரேல் தூதரகம் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்களில் தாக்குதல் நிகழ்த்தியிருப்பேன்.

என்னை நீங்கள் பயங்கரவாதி என்று கூறலாம். ஆனால் முஸ்லிம் நாடுகள் மீது படையெடுத்து, அங்குள்ள வளங்களைச் சுரண்டி, முஸ்லிம் மக்களைக் கொன்று குவித்துவரும் அமெரிக்கப் படையினரைத்தான் நாங்கள் பயங்கரவாதிகள் என்கிறோம்.

ஐ.எஸ். அமைப்பினர் மீது அமெரிக்கா நிகழ்த்தி வரும் வான்வழித் தாக்குதலுக்குப் பழி வாங்கவே அமெரிக்காவில் தாக்குதல் நிகழ்த்த திட்டமிட்டேன்.

ஐ.எஸ். அமைப்பின் ஆதரவாளர்கள் நாடெங்கும் வியாபித்துள்ளனர். நீங்கள் நினைப்பதைவிட அதிக வலுவான கட்டமைப்பு எங்களுக்கு உள்ளது என்றார் அவர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply