CHOGM தினம் இன்று ஆரம்பம்; பிரிட்டிஷ் மகாராணி தலைமை

பொதுநலவாய தினம்’ இன்று பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் தலைமையில் ஆரம்பமாகின்றது. இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரிட்டிஷ் சென்றுள்ளார். இவருடன் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான குழுவொன்றும் கலந்து கொள்ளவுள்ளது.

இதேவேளை, இந்நிகழ்வுகளுக்கும் அப்பால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரோனை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். இச்சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் கலந்து கொள்வார்.

இந்தியப் பிரதமர் மோடியின் இலங்கை விஜயம் குறித்த ஏற்பாடுகளை மேற்கொள்ளும் முகமாக அமைச்சர் மங்கள அவசரமாக நாடு திரும்பவுள்ள நிலையில், பொதுநலவாய அமைச்சர்கள் செயற்பாட்டுக் குழு கூட்டத்தில் இலங்கை சார்பில் கலந்து கொள்வதற்காக பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி. பெரேரா நாளை (10) மாலை பிரிட்டிஷ் நோக்கி பயணிக்கவுள்ளார்.

பொதுநலவாய அமைச்சர்கள் செயற் பாட்டு குழு கூட்டம் எதிர்வரும் 11ம் 12ம் திகதிகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply