இந்திய பிரதமர் வெள்ளிக்கிழமை பி.ப. 3.20க்கு இலங்கை பராளுமன்றில் உரை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, எதிர்வரும் வெள்ளி க்கிழமை பிற்பகல் 3.20 மணிக்கு இலங்கைப் பாராளு மன்றத்தில் விசேட உரை நிகழ்த்தவுள்ளார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரும் இந்தியப் பிரதமர் மோடி, அன்றைய தினம் பிற்பகலே இலங்கை பாராளும ன்றத்திற்கு சமுகமளித்து விசேட உரை நிகழ்த்த ஏற்பாடா கியுள்ளது. வரலாற்று ரீதியாக மிகவும் நட்பு நாடு என்ற வகையில் இந்தியப் பிரதமரினால் பாராளு மன்றத்தில் ஆற்றப்படும் உரை மிகவும் முக்கியத்துவமுடையதாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை இந்திய பிரதமர் மோடி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருடன் தனித்தனி சந்திப்புக்களை நடத்தி இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு, 13 வது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்தல், இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை, இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள், மீள்குடியேற்றம், மலையக இந்திய வம்சாவளி தமிழர்கள், இந்திய நிதியுதவியின் கீழ் வடக்கில் அமைக்கப்பட்டு வரும் வீடமைப்புத் திட்டம், புகையிரதப் பாதை, மாணவர்களுக்கான புலமைப்பரிசில், சிறைக்கைதிகள் புதிய அரசாங்கத்தின் நூறுநாள் வேலைத் திட்டம், பாராளுமன்றத் தேர்தல் உள்ளிட்ட இருதரப்பு இராஜதந்திர உறவுகள் குறித்து இந்தப் பேச்சு வார்த்தையில் கலந்துரையாடப்படவுள்ளது.

பிரதமர் மோடியின் வருகை தொடர்பான ஏற்பாடுகளை மேற்பார்வை செய்யும் வகையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை வந்திருந்தார். இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கியிருந்த இவர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து இலங்கை – இந்திய நல்லுறவில் பங்களிப்புச் செய்யும் விடயங்கள் குறித்து தீர்க்கமாக ஆராய்ந்திருந்தார்.

வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜிடம் அதிகாரப் பகிர்வு, இலங்கைக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்கள், இலங்கையில் இந்துப் பல்கலைக்கழகம் மற்றும் மலையக மாணவர்களுக்கான பல்கலைக்கழகத்தின் அவசியம் ஆகியன குறித்து தமிழ் தேசி யக் கூட்டமைப்பும் மலையக அரசியல் கட்சிகளும் கோரிக்கைகளை முன்வைத்தி ருந்தன. நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகளாலும் சுஸ்மா சுவராஜிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தீர்க்கமான பதில் இந்திய பிரதமர் மோடியின் பாராளுமன்ற உரையில் கிடைக்குமென நம்பப்படுகிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மலையக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் பிரதமர் மோடி சந்திப்பாரென தெரியவருகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த மாதம் நடுப்பகுதியில் புதுடெல்லி சென்றிருந்தபோது, விடுத்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி நல்லெண்ண அடிப்படையில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

மேலும் பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தியதையடுத்து அன்றைய தினம் மாலை அநுராதபுரம் ஸ்ரீமகா போதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் விசேட சமய மத அனுஷ்டானங்களிலும் கலந்து கொள்ளவுள்ளார்.

அத்துடன் கண்டி தலதாமாளிகைக்கும், திருகோணமலையிலுள்ள சம்பூர் அனல்மின் நிலையத்திற்கும் மோடி நேரில் விஜயம் செய்வாரெனவும் தெரியவருகிறது. வடக்கில் இந்திய நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் வீடமைப்புத் திட்டத்தையும் மலையகத்தில் இந்திய வம்சாவளி தமிழர்களுக்கென முன் னெடுக்கப்படும் வீடமைப்புத் திட் டத்தினையும் இந்திய பிரதமர் மேற்பார்வை செய்வாரெனவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

1987ம் ஆண்டிற்குப் பின்னர் இலங்கை வரும் முதலாவது இந்திய பிரதமர் இவரென்பதால் இராஜதந்திர மட்டத்தில் பிரதமர் மோடியின் இலங்கை விஜயம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்திய பிரதமர் மோடி மொரீஷியஸ், சீசெல்ஸ் மற்றும் மாலைதீவு ஆகிய இந்து சமுத்திர நாடுகளுக்கான விஜயத்தின் ஒரு பகுதியாகவே இலங்கைக்கும் வருகை தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply