மோடியின் இலங்கை பயணம் தமிழர்களுக்கு நன்மையை ஏற்படுத்தும்: தமிழிசை செளவுந்தரராஜன்
பிரதமர் மோடியின் இலங்கை பயணம் தமிழர்களுக்கு நிச்சயம் நன்மையை ஏற்படுத்தும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளவுந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பாரத பிரதமர் மோடியின் இலங்கை பயணம் தமிழர்களுக்கு நிச்சயம் நன்மையை ஏற்படுத்தும் என்றும். மோடியை விமர்சிக்க வைகோ, திருமாவளவன், இளங்கோவனுக்கு உரிமை இல்லை. அரசியல் நோக்கத்திற்காகவே அவர்கள் மோடியின் இலங்கை பயணத்தை கையில் எடுத்துள்ளனர் என்று தெரிவித்தார்.
மேலும் கூறுகையில், 2016 ஆம் ஆண்டு மகளிர் தினத்திற்குள் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை அரசு மூட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply