ஊழல் மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்களில் காட்டுச் சட்டங்களை அமுல்படுத்த முடியாது : ராஜித

முன்னாள் ஜனாதிபதியின் குடும்பத்தார் மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் என் இன்னும் கைதுசெய்யப்படவில்லை என்ற கேள்விக்கு இன்னும் இரண்டு வாரங்களில் பதில் கிடைக்குமென சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொள்ளுப்பிட்டியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற அரசாங்கத்தில் பதிவுசெய்யப்பட்ட மருத்துவர்களின் 65ஆவது ஆண்டு பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

ஊழல் மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்களில் காட்டுச் சட்டங்களை அமுல்படுத்த முடியாதென தெரிவித்த அமைச்சர், இவ்விடயத்தில் மிகவும் நிதானமாக செயற்படவேண்டியதன் அவசியத்தையம் தெளிவுபடுத்தினார்.

நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக நடப்பு அரசாங்கம் பதவிக்கு வரும்போது கூறியமை குறிப்பிடத்தக்கது

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply