அதிமுக ஆட்சி குறித்து கருணாநிதி குற்றச்சாட்டு

அதிமுக ஆட்சியில் அமைச்சர்கள் கொலு பொம்மைகளைப் போல் நடத்தப்படுவதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெல்லை பொறியாளர் தற்கொலைக்கு அமைச்சர் ஒருவர் காரணம் என்பதை அறிந்தே அதிமுக அமைச்சரின் கட்சிப்பதவியும், அரசுப் பதவியும் பறிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சி காலம், மாற்றுத் திறனாளிகளுக்குப் பொற்காலம் என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.  மாற்றுத்திறனாளிகள் நலனுக்கென அதிமுக ஆட்சியில் 49 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், திமுக ஆட்சியில் 176 கோடி ரூபாய் அளவுக்கு இந்த நிதி, உயர்த்தப்பட்டதை அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக அரசு அறிவித்து, இரண்டு ஆண்டுகளாகியும், மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டிய கருணாநிதி, மாற்றுத்திறனாளிகளின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய பட்ஜெட்டில் விலக்கிக்கொள்ளப்பட்ட உதவித்தொகை காரணமாக, தமிழகத்திற்கு ஆறாயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும் என்றும் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply