குற்றச்சாட்டுக்களிலிருந்து பொன்சேகா விடுவிப்பு வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி

2010 ஜனாதிபதி தேர்தலின் போது இராணுவத்தில் இருந்து தப்பியோடிய 10 இராணுவ வீரர்களுக்கு அடைக்கலம் கொடுத்து அரசாங்கத்துக்கு எதிராக சதி செய்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா விடுவிக்கப்பட்டுள்ளார். பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படாதததை அடுத்து கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி தேவிக்கா லிவேரா முன்னாள் இராணுவத்தளபதியையும் கெப்டன் ஹரிப்பிரியத சில்வாவையும் அவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த 41 குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டார்.

இதுதவிர அனுமதியின்றி வெளிநாடு செல்வதற்கு பிரதிவாதிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவையும் நீக்குமாறு நீதிபதி குடிவரவு குடியகல்வு கட்டுப் பாட்டாளருக்கு உத்தரவிட்டார்.

2009 நவம்பர் 16 மற்றும் 2010 ஜனவரி மாதம் 27ஆம்திகதிகளுக்கு இடைப்பட்ட காலப் பகுதியில் இராணுவ வீரர்கள் 10 பேரை கட்டளையிடும் அதிகாரியின் சட்டபூர்வ உத்தரவுக்கு புறம்பாக செயற்பட ஆலோசனை வழங்கியதாகவும் அவர்களை அரசாங்கத்திக்கு எதிராக செயற்பட சதி செய்ததாகவும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரம் தாக்கல் செய்திருந்தார்.

இதற்கு உதவி வழங்கியதாக சேனக ஹரிப்பிரிய த சில்வாவுக்கு எதிராகக் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப் பட்டிருந்தது. பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்கைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதா? இல்லையா? என்பது குறித்து தீர்மானிப்பதற்காக இந்த வழக்கு 18ஆவது சாட்சியாக குறிப்பிடப் பட்டிருந்த மேஜர் சுரங்க பிரசாத் பண்டார நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.

இங்கு சாட்சியளித்த அவர் 2008ஆம் ஆண்டு சரத்பொன்சேகா ஓய்வு பெற்ற பின் அவரின் பாதுகாப்பாக சிங்கபடையணி அதிகாரிகள் இரு வருடங்களாக 50 வீரர்களும் கமாண்டோ பிரிவு அடங்கலான 20 படையினரும் இராணுவ சேவை படைப்பிரிவு அதிகாரிகள் 10 பேரும் வழங்கப்பட்டிருந்தனர்.

இவர்களிடையே நான்தான் சிரேஷ்ட அதியாரியாகும். சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக பணியாற்றியபோ அவரின் பாதுகாப்புக்கு 600 படை வீரர்கள் வழங்கப்பட்டிருந்த போதும் அவர் ஓய்வு பெற்ற பின் இந்தத் தொகை 80 ஆகக் குறைக்கப்பட்டது,

சரத் பொன்சேகாவின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டிருந்த 10 இராணுவ வீரர்களுக்கும் கடமைக்கு திரும்பக் கூடாது என அவர் ஒருபோதும் பணிக்க வில்லை. அவர்களைத் தொடர்ந்தும் வைத்திருக்க எதுவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை எனவும் மேஜர் சுரங்க பிரசாத் பண்டார சாட்சிய மளிக்கையில் குறிப்பிட்டார்.

வழக்கின் முதலாம் மற்றும் இரண்டாம் பிரதிவாதிகள் 10 இராணுவ வீரர்களையும் கடமைக்கு திரும்பாமல் தடுக்கு எதுவித அழுத்தமும் வழங்கவில்லை என்பது மேற்குறிப்பிட்ட சாட்சி மூலம் நிரூபணமாவதால் இந்த வழக்கை தொடர்ந்து முன்னெடுக்க முடியாதென பிரதிவாதிகள்தொடர்பில் ஆஜரான சட்டத்தரணி உபுல் ஜயசூரிய நீதிமன்றத்தில் அறிவித்தார்.

இதனடிப்படையில், இரு பிரதி வாதிகளுக்கும் எதிரான சகல குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப் பட்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply