லண்டனில் சிறிசேனவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

மூன்றுநாள் அதிகாரபூர்வ பயணமாக லண்டன் சென்றுள்ள இலங்கை அதிபர் சிறிசேனவுக்கு எதிராக பிரிட்டிஷ் புலம்பெயர் தமிழர் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்துக்கு அருகே வெஸ்ட் மின்ஸ்டர் அபே அருகே பிரித்தானிய தமிழர் பேரவை இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. இதுபோல், காமன்வெல்த் தலைமையகமான மார்ல்பரோ ஹவுஸ் அருகே தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும், தமிழ் இளையோர் அமைப்பும் சிறிசேனவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இலங்கையில் ஆட்சி மாறினாலும் ஆட்சியாளர்களின் நிலைப்பாடு மாறவில்லை என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர். இலங்கையில் இறுதி போரின் போது நிகழ்ந்த போர்க்குற்றங்களுக்கு உரிய விசாரணை நடத்தவும், கைதான நிலையில் காணாமல்போனவர்கள் குறித்த விபரங்களை வெளியிடுவதற்கும் புதிய அரசும் தவறி வருவதாக பிரித்தானிய தமிழர் பேரவை குற்றம்சாட்டியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply