நைஜீரியாவில் சிறுமி மனித குண்டு தாக்குதலில் 34 பேர் பலி
நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் மைதுகுரி நகரம் உள்ளது. இங்கு நகரின் மையத்தில் மார்க்கெட் உள்ளது. அங்கு அதிக அளவில் மக்கள் கூடுவர். நேற்று மதியம் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது கூட்டத்துக்குள் புகுந்த தற்கொலை படை சிறுமி தனது உடலில் கட்டியிருந்த சக்தி வாய்ந்த குண்டுகளை வெடிக்க செய்தாள்.இந்த தாக்குதலில் 34 பேர் அதே இடத்தில் உடல் சிதறி பலியாகினர். கடைகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. இடிபாடுகளில் சிக்கி பலர் காயம் அடைந்தனர்.இத்தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. ஆனால் இதில் ‘போகோ ஹாரம்’ தீவிரவாத அமைப்பு சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply