மஹிந்தவை அரசியலுக்குள் இழுக்கும் பின்னணியில் ஐ.தே.க அமைச்சரவை பேச்சாளர் ராஜித

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் அரசியலுக்கு இழுக்கும் முயற்சியின் பின்னணியில் ஐ.தே.க. இருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரசியலில் இவ்வாறு நடப்பது இயல்பு என்று குறிப்பிட்ட அவர் கடந்த காலத்தில் கட்சிகளை பிரிக்க யார் இவ்வாறு செய்யவில்லை என்றும் அவர் கேள்வியெழுப்பினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இது தொடர்பாக வினவப்பட்டது. இதற்குப் பதிலளித்த அமைச்சர்,

ஐ.தே.க.வை துண்டாட கடந்த காலத்தில் முயற்சி செய்யப்பட்டது. தற்பொழுது மஹிந்த ராஜபக்ஷவை அரசியலுக்கு கொண்டு வருவதற்கு முயற்சி நடக்கிறது. இதன் பின்னணியில் ஐ.தே.க. இருக்கிறது. இதற்கு சாட்சி தேவையில்லை.

எதிரிக்கு எதிரி நண்பன் என்பார்கள். மைத்திரிபால சிறிசேனவின் எதிரி ஐ.தே.க.வின் நண்பனாகிறார். ஐ.தே.க. இவ்வாறு நடந்து கொள்ளாவிட்டால்தான் அதனை அதிசயம் என்று கூற வேண்டும்.

சுதந்திரக் கட்சியின் வெற்றிக்கு மஹிந்த ராஜபக்ஷ அவசியம் தேவை. அதனாலேயே, மஹிந்த ராஜபக்ஷவையும் சந்திரிகா குமாரதுங்கவையும் கட்சிப் போஷகர்களாக நியமித்துள்ளோம். சந்திரிகா கட்சிக்கு வழிகாட்டுகையில் மஹிந்த ராஜபக்ஷ மட்டும் வேறு வேலைகளைச் செய்து வருகிறார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply