பாகிஸ்தானில் வரதட்சணை திருப்பி கொடுக்காததால் 10 பேரை சுட்டுக்கொன்ற போலீஸ்காரர்
பாகிஸ்தானின் வட மேற்கில் உள்ள கைபர் பக்துன்கவா மாகாணம் சார்சதா மாவட்டத்தை சேர்ந்தவர் மிர்அகமது ஷா. இவர் போலீஸ்காரராக பணிபுரிகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அப்போது மிர்அகமது ஷா மணமகளுக்கு கணிசமான பணம் வரதட்சணையாக கொடுத்தார். இந்த நிலையில், ஏதோ காரணத்துக்காக திருமணம் நடைபெறாமல் நின்று விட்டது. எனவே தான் மணமகளுக்கு கொடுத்த வரதட்சணை பணத்தை போலீஸ்காரர் மிர்அகமது ஷா திருப்பி கேட்டார்.ஆனால் மணமகள் வீட்டார் தராமல் இழுத்தடித்தனர். 6 மாதம் கழித்து மீண்டும் சென்று கேட்டார். அப்போது அந்த பணத்தை திரும்ப தரமுடியாது என திட்டவட்டமாக மறுத்து விட்டனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த மிர்அகமது ஷா இரவில் ஏ.கே.47 ரக துப்பாக்கியுடன் மணமகள் வீட்டுக்கு சென்றார். அங்கு அவரது குடும்பத்தினர் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர்.
பின்னர் அவர்களை நோக்கி சரமாரியாக சுட்டார். இச்சம்பவத்தில் மணமகள் அவரது பெற்றோர், 2 சகோதரர்கள், 2 குழந்தைகள் 3 பெண்கள் உள்பட 10 பேர் குண்டுகள் பாய்ந்து பலியாகினர்.
அதை தொடர்ந்து அவர் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply